உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுகாதார பணியாளர்களுக்கு துாய்மை பணி உபகரணங்கள்

சுகாதார பணியாளர்களுக்கு துாய்மை பணி உபகரணங்கள்

ஊட்டி; ஊட்டி பாலாடா பகுதியில் சுகாதார பணியாளர்களுக்கு அறக்கட்டளை சார்பாக துாய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஊட்டியில் சுகாதார பணியாளர்கள் தங்கள் பணிகளுக்கு தேவையான கையுறை, மழைக்கோட்டு இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் பல்வேறு உபகரணம் கொடுக்கப்படாலும் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில், ஊட்டியில் உள்ள குட்செபெட் சர்வதேச பள்ளியின் நிறுவனர் டாக்டர் தாமஸ் நிறைவு அறக்கட்டளையின் சார்பில், பாலாடா பகுதியில் கையுறை, மழைக்கோட்டு உட்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனை, அறக்கட்டளை நிர்வாகிகள், அசோக் பிரசாத், உதிதாபிரசாத் ஆகியோர், ஊட்டி நகராட்சி கமிஷனர் கணேசனிடம் வழங்கினர். சுகாதார அலுவலர் ஷிபி, சுகாதார ஆய்வாளர் வைரம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ