உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனி நபர் அடையாள அட்டை: விவசாயிகளுக்கு தளர்வு குறை தீர்க்கும் கூட்டத்தில் தகவல்

தனி நபர் அடையாள அட்டை: விவசாயிகளுக்கு தளர்வு குறை தீர்க்கும் கூட்டத்தில் தகவல்

ஊட்டி; 'தனிநபர் அடையாள அட்டை பெற கூட்டு பட்டா விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் தேயிலை, மலை காய்கறிகள் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலைக்கு கடந்த, 25 ஆண்டுக்கு மேலாக போதிய விலை கிடைக்காததால், 30 சதவீதம் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. ஆறு வட்டங்களை உள்ளடக்கிய நீலகிரியில், அந்தந்த பகுதிகளின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. சமீப காலமாக நீலகிரியில் மலை காய்கறிகள் விதைப்பு செய்து அறுவடை செய்யும் வரை தோட்டங்கள் பராமரிப்பு பணி என்பது சவாலானது. இந்த இடர்பாடுகளால், 40 சதவீதம் பேர், முதுகெலும்பான விவசாய தொழிலை கைவிட்டுள்ளனர். பிற விவசாயிகள் தொழிலை விடக்கூடாது என்பதற்காக நஷ்டத்துடன் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 'விவசாயிகளின் நலன் காக்கவும், விவசாயிகளின் தேவைகளை வேளாண், தோட்டக்கலை மற்றும் இதர துறைகளின் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்ப விளக்கங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பணியை மேலும் விரிவுப்படுத்தி ஊக்கப்ப டுத்த வேண்டும்,' என்றனர். தளர்வு ஊட்டியில், ஒவ்வொரு மாதம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களில் விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர். சமீபத்தில், நடந்த கூட்டத்தில் மசினகுடி விவசாயிகள், 'தென்னை மற்றும் வெண்ணெய் புழ செடிகளில் ஏற்பட்டுள்ள நோய் மற்றும் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்,' என, தெரிவித்தனர். இப்பிரச்னைக்கு தோட்டக்கலைத்துறை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், ''கூட்டு பட்டா உள்ள விவசாயிகளுக்கு, விவசாய பயன்பாட்டிற்காக, தனி நபர் அடையாள அட்டை பெறுவதில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் தனி நபர் அடையாள அட்டை பெற பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி