| ADDED : டிச 27, 2025 06:35 AM
பந்தலுார்: பந்தலுார் 'ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில், கிறிஸ்துமஸ் விழா மற்றும் சுய தொழிலில் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி ஜான்சிராணி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் விஜயன் சாமுவேல் தலைமை வகித்தார். கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மார்கிரேட்மேரி, ஆசிரியர் ஹில்டா ஆகியோர் பேசுகையில்,'' சமூக வலைத்தளங்களில் நன்மை உண்டாக்கக்கூடிய, தகவல்களை எடுத்து கொள்வதை விட, தீய செயல்களுக்கான தகவல்களை அதிகளவில் இளைய சமூகத்தினர் எடுத்து கொள்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு கல்வி மற்றும் சமூக பணிகளில் இளைய தலைமுறைகள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார். பல பெண்களுக்கு, சுய வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்த தையல் பயிற்சி ஆசிரியர் சுலோச்சனாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், டோம், பாஸ்டர் ஜான்கிறிஸ்டி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.