உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்பாத்தி கோவில்களில் தேர்த்திருவிழா மாயவரத்தில் அழைப்பிதழ் வினியோகம்

கல்பாத்தி கோவில்களில் தேர்த்திருவிழா மாயவரத்தில் அழைப்பிதழ் வினியோகம்

பாலக்காடு: பாலக்காடு, கல்பாத்தி தேர்த்திருவிழாவுக்கு, மாயவரம் மயூரநாதர் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அக்ரஹார மக்களுக்கு, கல்பாத்தி கோவில் நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர். கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மந்தக்கரை மகா கணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில்களில் தேர் திருவிழா, வரும், நவ., 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் கொடியேற்றம் நவ., 8ம் தேதியும், 14, 15, 16 தேதிகளில் திருத்தேரோட்டமும் நடக்கிறது. மாயவரம் மயூரநாதர் கோவில், கல்பாத்தி கோவில்களில் தேர் திருவிழா ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. கல்பாத்தியில் இருப்பவர்கள், மாயவரம் உள்ளிட்ட பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். அதன் நினைவாக, மாயவரம் மயூரநாதர் கோவிலில் வழிபட்டு, கல்பாத்தி தேர்த்திருவிழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் சுஜித்குமார் தலைமையிலான நிர்வாகிகள், மாயவரத்தில் அர்ச்சகர்கள், அக்ரஹார மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர். சிதம்பரம் சிவன் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருவாலூர் சனீஸ்வரன் கோவில், கும்பகோணம் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர மடம் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற கல்பாத்தி கோவில் நிர்வாகிகள், மாயவரம் சிவாகம வேத பாடசாலை ஆச்சாரியார் சுவாமிநாத சிவாச்சாரியாரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ