உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரத்தில் பைக் மோதி ஐ.டி., ஊழியர் பலி

மரத்தில் பைக் மோதி ஐ.டி., ஊழியர் பலி

பாலக்காடு : பாலக்காடு அருகே மரத்தில் பைக் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.கேரள மாநிலம், எர்ணாகுளம் கணயன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அனூப், 24. தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் பைக்கில், உதயம்பேரூர் பகுதியை சேர்ந்த தோழியுடன் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது, அதிகாலை, 3:00 மணிக்கு பாலக்காடு வடக்குமுறி பகுதியில், பைக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதியது.இதில், அனூப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தோழியை அப்பகுதி மக்கள் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த குழல்மன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை