உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்து வரும் தடுப்பு சுவர் சீரமைக்க வேண்டியது அவசியம்

சேதமடைந்து வரும் தடுப்பு சுவர் சீரமைக்க வேண்டியது அவசியம்

கூடலுார்;கூடலுார் கைதகொல்லி அருகே, நாடுகாணி -தேவாலா சாலையோரம், சேதமடைந்து வரும் சிமெண்ட் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.கூடலுார், நாடுகாணி தேவாலா சாலையோரம், கைத்கொல்லி அருகே, நீரோடையை ஒட்டி, மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க சிமெண்ட் தடுப்பு சுவர் அமைந்துள்ளனர். தற்போது அந்த தடுப்பு சுவர் சேதமடைந்து வருகிறது. அப்பகுதியில், வாகனங்கள் செல்லாத வகையில், நெடுஞ்சாலை துறையினர் மண் மூட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் அதிர்வால், தடுப்பு சுவர் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் வாகன போக்குவரத்துக்கும் சிரமம் ஏற்படும். எனவே, அப்பகுதியில் சேதமடைந்து வரும் தடுப்பு சுவரை சீரமைக்க ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை