உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தைரியமும், முயற்சியும் வேண்டும் பார்வையற்றோர் இல்லத்தில் விழிப்புணர்வு

தைரியமும், முயற்சியும் வேண்டும் பார்வையற்றோர் இல்லத்தில் விழிப்புணர்வு

கோத்தகிரி;கோத்தகிரி லாங்வுட் சோலை பகுதியில் உள்ள ஜோதி சேவா பார்வையற்றோர் இல்லத்தில், குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் தன்னாட்சி கல்லுாரி சார்பில் மகளிர் தின விழா நடந்தது.அதில், பார்வையற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லுாரி இலக்கியம் பிரிவு மாணவி ஜாஸ்மின் கிருத்திகா பேசுகையில், ''இயலாமை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை நமது வாழ்வில் மிகப்பெரிய சாதனைகளை அடைவதை தடுக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளதால், வாழ்வில் முன்னேற முயற்சியும், தைரியமும் அவசியம்,'' என்றார்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உதவி பேராசிரியை அருட்சகோதரி ஜெனட் லோபோ, தாவரவியல் துறை உதவி பேராசிரியை டாக்டர் ஜெமிமா ஆகியோர் மகளிரின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்விலும் பெண்களின் வெவ்வேறு பாத்திரங்கள் குறித்தும் பேசினர். இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ