மேலும் செய்திகள்
குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
24-Jun-2025
குன்னுார்; குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி அமைப்பு, சத்யசாய் சேவா மாருதி சேரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை சார்பில், கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி முகாமில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்க உள்ளனர். முகாமின் நிறைவு நாள் விழாவிற்கு ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி அமைப்பின் துணை தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில்,''முதல்வர் ஸ்டாலின் ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க வந்த போது, அளித்த பேட்டியில், குன்னுாரில் செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதனை விரைவில் செயல்படுத்த வேண்டும்,''என்றார்.பொருளாளர் ராஜா முன்னிலை வகித்து பேசுகையில்,''அனைத்து பள்ளிகளிலும் ஹாக்கி விளையாட்டை துவக்கி வைக்க வேண்டும்,' என்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க., மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா பேசுகையில், ''குன்னூரில் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்,''என்றார். தொடர்ந்து, வீரர் வீராங்கனைகளுக்கு சீருடைகள் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தலைவர் அனந்தகிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்.
24-Jun-2025