மேலும் செய்திகள்
புலி தாக்கி ஆடுகள் பலி; வனத்துறையினர் ஆய்வு
12-Sep-2025
பந்தலுார்; தமிழக எல்லையை ஒட்டிய, நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே, கேரளா வயநாடு சீரால் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. நேற்று முன்தினம் புளிஞ்சால் பகுதியில் செய்தலவி என்பவரின் பசுமாட்டை சிறுத்தை தாக்கியது. அதனையடுத்து வனச்சரகர் அஜீத்குமார் தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு செய்து, கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி, கூண்டு வைத்து அதனுள் உயிரிழந்த பசுவை வைத்து கண்காணித்தனர். நேற்று அதிகாலை அங்கு வந்த சிறுத்தை பசுவின் உடலை ருசிக்க முயன்றபோது கூண்டில் சிக்கியது. மூன்று- வயது ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை சுல்தான் பத்தேரியில் உள்ள வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உயரதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
12-Sep-2025