மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
15-Dec-2025
பந்தலுார்: நீலகிரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் சார்பில், நுாற்றாண்டு விழா குறித்து, மக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில் சிறப்பு ஊர்வலம் நடந்தது. தேவாலா பஜாரில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் சென்று எருமாடு பகுதியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்திற்கு சையத் அலி அக்பர் சகாபி தலைமை வகித்தார். மதனி, மஜீத் ஹாஜி, சலாம் முசிலியார், அய்முட்டி, அப்துல் கபூர் முன்னிலை வகித்தனர். மேலும், நுாற்றாண்டு விழா குறித்தும், ஜன, 6ல் நீலகிரிக்கு வருகை தரும், அன்பு பயணத்தை சிறப்பாக வழி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ரபீக், சுலைமான்,நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
15-Dec-2025