உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜீன்பூல் மலையேற்ற பயணம் புதிய அனுபவம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கருத்து

ஜீன்பூல் மலையேற்ற பயணம் புதிய அனுபவம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கருத்து

கூடலுார்; 'கூடலுார் ஜீன்புல் தாவர மையத்தில் துவங்கப்பட்டுள்ள மலையேற்ற பயணத்தில் சென்று வருவது புதிய அனுபவம்,' என, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், 14 மாவட்டங்களில் 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து, டிஜிட்டல் வரைபடங்களுடன் தமிழக மலையேறும் திட்டம், கடந்த மாதம் துவங்கப்பட்டது.இதில், நீலகிரி மாவட்டத்தில், கூடலுார் வனக்கோட்டத்தில், ஜீன்புல் தாவர மையம், ஊசிமலை (கரியன் சோலை) உள்ளிட்ட, 10 மலையேற்ற வழித்தட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.மலையேற்றம் செல்ல, இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, வருபவர்களை வன ஊழியர்கள் வழிகாட்டுதலுடன் அழைத்து சென்று வருகின்றனர்.கூடலுாரில் உள்ள இரண்டு மலையேற்ற பயணத்தில் சென்று வர முன்பதிவு செய்து வருபவர்கள், கூடலுார் நாடுகாணி ஜீன்புல் தாவர மையத்திலிருந்து, குறிப்பிட்ட வழித்தடத்தில் அழைத்து சென்று வருகின்றனர்.இதில், ஜீன்புல் தாவர மையத்தில் உள்ள மலையேற்ற பயணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து சென்று வருகின்றனர்.கடந்த வாரம் முதல் உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து, இவ்வழிதடத்தில் ஆர்வத்துடன் மழையேற்றம் சென்று வந்தனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'மலையேற்ற பயணத்தில் நடந்து சென்று வருவது புதிய அனுபவமாக உள்ளது. இங்குள்ள காலநிலையும், பசுமையான மலைகளும் களைப்பு தெரியாத வகையில் ரசித்து செல்லும் வகையில் உள்ளது. மேலும், ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சி அற்புதமாக உள்ளது. இவ்வழியில், நடந்து செல்வதன் மூலம் வனங்களையும், நீர்நிலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உணர முடிகிறது. இப்பகுதியில் சிறப்புகள் குறித்து, வழிகாட்டிகள் சிறப்பாக விளக்கினர்.இயற்கை சார்ந்த சுற்றுலா மற்றும் மலையேற்றத்துக்கு இவ்வழித்தடம் சிறந்த பகுதியாக உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ