உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சி நுாலக அடையாள அட்டை வழங்கல்

காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சி நுாலக அடையாள அட்டை வழங்கல்

பந்தலுார்; காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பந்தலுார் நுாலகம் சார்பில், புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில், மாணவர்கள் 100 பேருக்கு, வாசகர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நுாலகர் நித்திய கல்யாணி வரவேற்றார். நுாலகர் அறிவழகன் தலைமை வகித்து, பள்ளி மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்துவதால், கிடைக்கும் பயன்கள் குறித்தும், பொது அறிவு புத்தகங்களின் மூலம் எதிர்கால போட்டி தேர்வுகளை சந்திக்கும் முறைகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, சமூக ஆர்வலர் காளிமுத்து, 100 உறுப்பினர் அட்டைக்கான தொகையை நுாலகத்திடம் வழங்கி, மாணவர்களுக்கு இலவசமாக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் நுாலகர் முத்துசாமி, நுாலக பணியாளர்கள் அம்பிகா தேவி, சரஸ்வதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். -* பந்தலுார் அருகே மேபீல்டு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பாபு தலைமையில், காமராஜர் பிறந்த நாள் விழா பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. உப்பட்டி எம்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, முதல்வர் கவிதா தலைமையில் நடந்தது. மாணவி தவ்ஹீதா வரவேற்றார். பள்ளி நிர்வாக குழு தலைவர் ஆலி, பங்கேற்று பேச்சு, கட்டுரை மற்றும் வரைதல், பாடல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மாணவர் தலைவர் கீர்த்திகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை