உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா

ஊட்டி: ஊட்டி லோயர் பஜார் பகுதியில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி இன்று புதன்கிழமை தொடங்கி வரும், 29-ம் தேதி வரை நடக்கிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றம் சார்பில் முதல் நாள் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 27ம் தேதி சூரசம்ஹாரமும் 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 29ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி வாழைமர தோரணம் கட்டப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் கைலாசமூர்த்தி, ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ