உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி கோடநாடு வழக்கு; இருவருக்கு சம்மன்

கோத்தகிரி கோடநாடு வழக்கு; இருவருக்கு சம்மன்

கோத்தகிரி; கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோத்தகிரியை சேர்ந்த, இருவருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017ல் காவலாளியை கொலை செய்த, 10 பேர் கொண்ட கும்பல், பங்களாவுக்குள் புகுந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. இதில், தொடர்புடைய, 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தற்போது, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.2017ல் சம்பவம் நடந்த நேரத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த வாப்பு என்பவர், பேரூராட்சி தலைவராக இருந்தார். அதேபோல, சோலுார் மட்டம் பிரமுகர் விவேக் என்பவர் அ.தி.மு.க., முக்கிய பொறுப்பில் இருந்தார்.இவர்கள் இருவரையும், விசாரிக்க எதுவாக கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், கடைசி வாய்தாவாக, 'இன்று (26ம் தேதி) காலை,10:00 மணிக்கு, கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை குழு முன் நேரில் ஆஜராக வேண்டும்,' என, போலீசார் சார்பில், மீண்டும் இருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை