மேலும் செய்திகள்
கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அறிவுரை
2 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
3 hour(s) ago
விவசாயிகள் அதிருப்தி
21 hour(s) ago
சாலையை சீரமைக்கணும்
21 hour(s) ago
தாமரை வண்ண அலங்காரத்தில் மாதா தேர் பவனி
21 hour(s) ago
கிருஷ்ணர், ராதை வேடமணிந்து குழந்தைகள் அசத்தல்ஊட்டி: ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி: ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று ஜெயந்தி விழா நடந்தது. காலை 5:30 மணிக்கு திருமஞ்சனம்: மாலை: வீடுகளில் சிறப்பு பூஜை ஊட்டி ஸ்ரீ ஹரிஹரன் பஜனை சபா குழுவினர் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சுமங்கலி பூஜைகள் திரளான மக்கள் பங்கேற்றனர். ஊட்டி இஸ்கான் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஊட்டி – மஞ்சூர் சாலையில் சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மாவிலை தோரணங்கள் மற்றும் மலர்களால் விதவிதமாக அலங்காரம் செய்தும்: வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கிருஷ்ணர்: குன்னுார் குன்னூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,) சார்பில் 63ம் ஆண்டு ஸ்தாபன தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரமாண்ட ஊர்வலத்தில், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்த திரளான மழலையர் அணிவகுத்துச் சென்றனர். வஜ்ரம் குழுவினரின் சிங்காரி மேளம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் துவங்கிய ஊர்வலம் மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., ரோடு வழியாக சென்ற ஊர்வலம் கிருஷ்ணாபுரம் ஐயப்பன் கோவிலை அடைந்தது. அங்கு, உறியடி, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. வேடமணிந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குன்னூர் நகர மற்றும் ஒன்றிய வி.எச்.பி., பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். பந்தலுார் பந்தலூர் அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பள்ளி முதல்வர் அன்பரசி தனராஜ் வரவேற்றார். பள்ளி தாளாளர் மனோஜ் குமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாணவர்கள் கிருஷ்ணர்., ராதை வேடமணிந்து, நடனமாடி மகிழ்ந்தனர். அய்யன்கொல்லி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு பூஜையுடன் சிறப்பாக நடந்தது.
2 hour(s) ago
3 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago