| ADDED : பிப் 16, 2024 11:33 PM
அன்னுார்;பொன்னே கவுண்டன் புதுாரில், நல்லாற்றீசருக்கு புதிதாக கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், யோக விநாயகர், நால்வர் பெருமக்கள், சேக்கிழார், பாலமுருகன், அண்ணாமலையார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை துவங்கியது. புனித நீர் அடங்கிய குடங்கள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. நேற்று மாலை திருவிளக்கு வழிபாடு, புற்று மண் எடுத்தல், காப்பு அணிவித்தல் நடைபெற்றது. இதில் பொன்னே கவுண்டன்புதுார், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை பிள்ளையார் வழிபாடு நடக்கிறது. மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், திருமுறை பாராயணமும் நடக்கிறது. இரவு எண் வகை மருந்து சாத்துதலும் விமான கலசங்கள் நிறுவுதலும் நடக்கிறது. வரும் 18ம் தேதி காலை இரண்டாம் கால கேள்வி பூஜையும், மூல விமான கலசம் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது.வரும் 19ம் தேதி காலை 5:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கும் திருச்சுற்று தெய்வங்களுக்கும், கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.