உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலியை பிடிக்கும் பணியில் கும்கி யானைகள் களம்

புலியை பிடிக்கும் பணியில் கும்கி யானைகள் களம்

கூடலுார்; கூடலுார்,தேவர்சோலை பகுதியில், கூண்டு வைத்து புலியை பிடிக்கும் பணியில், வனத்துறைக்கு உதவுவதற்காக, முதுமலையிலிருந்து வசீம், விஜய் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. கூடலுார், தேவர்சோலை பாடந்துறை சுற்றுவட்டார பகுதியில், உலா வரும், 3 வயது ஆண் புலி கடந்த சில மாதங்களில், 20 மாடுகளை தாக்கி கொன்றது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, 4 இடங்களில் கூண்டு வைத்து அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணி, 8ம் தேதி துவங்கியது. இப்பணியில், கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ்பிரபு தலைமையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உட்பட, 35 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 30 தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்கள், காட்டு யானைகளால் சில பகுதிக்கு சென்று புலியை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. யானைகளை விரட்டி, புலியை தேடும் பணியில் வன ஊழியர்களுக்கு உதவிடும் வகையில், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து, கும்கி யானைகள் வசீம், விஜய் ஆகியவை தேவர்சோலை பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''பாடந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளை தாக்கி கொன்ற, புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். சில பகுதிகளில் காட்டு யானைகளால் அப்பகுதிக்கு வன ஊழியர்கள் சென்று, புலியை தேடுவதில் சிரமம் உள்ளது. காட்டு யானைகளை விரட்டி, புலியை தேடும் பணியில் உதவுவதற்காக முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. புலியை விரைவில் பிடிக்க அனைத்து நடவடிக் கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோ ம். கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புலியை பிடிக்கும் பணியில் பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,'' என் றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ