உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குறிஞ்சி மலர்கள்

குறிஞ்சி மலர்கள்

ஊட்டி: ஊட்டி அருகே கல்லட்டி ஏக்குணி மலைச்சரிவில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தற்போது குறிஞ்சி மலர் சீசன் துவங்கி உள்ளது. ஊட்டி அருகே உள்ள எப்பநாடு, பிக்கபத்தி மந்து, ஏக்குணி அருகே கவரட்டி; கோத்தகிரி அருகே மார்வலா எஸ்டேட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.அதில், சில இடங்களில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்கள்; 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் 'ஸ்டாபிலாந்தஸ் குதியானஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட தனித்துவம் வாய்ந்த குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. இவை காப்புகாடுகளில் மலர்ந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை