உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நில உடமை விபரங்கள் குறித்த பதிவு பணி; 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

நில உடமை விபரங்கள் குறித்த பதிவு பணி; 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில உடமை விபரங்களை பதிவு செய்ய ஏதுவாக, 15ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.மத்திய மாநில அரசின் பல்வேறு திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, தங்களது நில உடமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் கிடைக்க, அனைத்து விப ரங்களை மின்னணு முறையில் சேகரிக்க வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண் மற்றும் நில உடமை விபரங்கள் இணைக்கும் பணி மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் நடந்து வருகிறது.இதற்காக, பி.எம்., திட்டத்தில் பயன் பெரும் விவசாயிகள், கட்டாயமாக நில உடமை விபரங்களை, மார்ச்., 31ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. பதிவு செய்யாத விவசாயிகள் நலன் கருதி, ஏப்., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசு திட்டத்தில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகிறது. எனவே, குறிப்பிட்ட நாட்களுக்குள், விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ