மேலும் செய்திகள்
தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கான பணிமனை
04-Jul-2025
ஊட்டி; ஊட்டியின் பல்வேறு இடங்களில் நடக்கும் வளர்ச்சி பணிகளை, சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.நீலகிரி மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையில், உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.ஊட்டி லவ்டேல் பிரிவு பகுதியில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லவ்டேல் பிரிவு முதல், பிங்கர் போஸ்ட் வரை நடந்து வரும் சாலை பணியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை வளாக கட்டடத்தை பார்வையிட்டு, 'கூடுதலாக பணியாளர்களை பணியமர்த்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தினர். மேலும், ஊட்டி ஆர்.கே., புரம் பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 25.58 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தீட்டுக்கல் கால்நடை பண்ணையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து, மூக்கூர்த்தி அணையின் மின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அபிலாஷா கவுர், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், தோட்டக் கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொ) வினோத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
04-Jul-2025