உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

அரசு பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

கோத்தகிரி, ;கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் போலீஸ் குடியிருப்புகளில், இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தையால், பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.சமீப காலமாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் உலா வருவது தொடர்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி முகப்பு வாயில் வழியாக வெளியேறிய சிறுத்தை, அருகிலுள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதனால், மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினர். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள், அச்சமடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில்,'வனத்துறை அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே, பல நாட்களாக, மக்கள் நடமாட்டம் நிறைந்த ஒரே இடத்தில் தொடர்ந்து உலாவரும் சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என, வலியுறுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ