உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தை நடமாட்டம்

சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குருகுத்தி நெடுகுளா இடையே, சாலை ஓரத்தில் சிறுத்தை அமர்ந்துள்ளது. அவ்வழியாக, வாகனங்கள் வந்ததால், சிறுத்தை சாலையில் இருந்து, தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளது. வாகனங்களில் வந்தவர்கள் இதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மக்கள் கூறுகையில், ‘மக்கள் நடமாட்டம் நிறைந்த இப்பகுதியில், பல நாட்களாக சிறுத்தை நடமாடி வருகிறது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,’என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்