மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
26 minutes ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
49 minutes ago
பந்தலூர்:பந்தலுார் தைதல்கடவு சாலை கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியின்,7 வது வார்டு தைதல்கடவு கிராமத்தில் 50 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். அம்மன்காவு செல்லும் சாலையிலிருந்து தைதல்கடவு செல்லும் கிராமத்திற்கு மண் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. வனப்பகுதி வழியாக செல்லும் இந்த மண் சாலையில் மழைக்காலத்தில் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாது. சுமார், 2 கிலோ மீ., நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். தொடர்ந்து, சாலையை சீரமைக்க, கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 39 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பெயர் அளவுக்கு 850 மீ., மட்டும் கற்களை பரப்பி விட்டு பணியை நிறைவு செய்தார்.கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, சாலை திறக்கப்பட்டு, ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த சாலையில் வாகனங்கள் சென்ற, நிலையில், கற்கள் முழுமையாக பெயர்ந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாததால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசர சிகிச்சைக்கு வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், ஆய்வு செய்ய கூட அதிகாரிகள் முன் வரவில்லை என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
26 minutes ago
49 minutes ago