உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பு இல்லாத தடுப்பணைகள் சீரமைத்தால் விலங்குகளுக்கு பயன்

பராமரிப்பு இல்லாத தடுப்பணைகள் சீரமைத்தால் விலங்குகளுக்கு பயன்

கூடலுார் : 'கூடலுார் வனக்கோட்டத்தில், கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் வனக்கோட்டத்தில் கோடையில், ஏற்படும் வறட்சி, வனத்தீ காரணமாக வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாடிக்கையாக உள்ளது. கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வனத்துறை சார்பில், நீரோடைகள் குறுக்கே தடுப்பணைகள் அமைத்துள்ளனர். அதில், பல தடுப்பணைகள் பராமரிப்பு இன்றி பயனற்று உள்ளது.கடந்த ஆண்டு பருவமழையும், நடப்பாண்டு கோடை மழையும் ஏமாற்றியதால், நடப்பு ஆண்டு கோடையில், வறட்சியின் தாக்கம் அதிகரித்து வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவைகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு வருவதால், மனித-விலங்கு மோதல் அதிகரித்தது. இதனால், அடுத்த ஆண்டு கோடையில், வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக, தடுப்பணைகள் சீரமைக்க வேண்டும். புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுாரில் ஆண்டு தோறும் ஜுன் முதல், நவ., வரை பருவ மழை பெய்து வருகிறது. எனினும், கோடையில், வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகமாகவே உள்ளது. கோடையில் குடிநீர் தேவைக்காக குடியிருப்பு நோக்கி வரும், வனவிலங்குகளால் மனித- விலங்கு மோதல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, முன்னெச்சரிக்கையாக சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ