மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி
28-Apr-2025
பாலக்காடு, ;பாலக்காடு அருகே, லாரியில் மோதியதில், பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்தார்.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிஷ்ணு, 26. இவர், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு பகுதியில் செயல்படும் தனியார் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலை நிறுவனத்தில் இருந்து, தங்கியிருக்கும் பகுதிக்கு நடந்து சென்ற போது, தவறி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஜிஷ்ணுவை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சக ஊழியர் சித்தூர் வண்டித்தாவளம் பகுதியைச் சேர்ந்த ஷெமீர், 25, பைக்கில் அழைத்து சென்றார்.அப்போது, கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், சந்திரநகர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியில் மோதியது. இதில் ஜிஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஷெமீரை, அப்பகுதி மக்கள் மீட்டு, திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து புதுச்சேரி (கசபா) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
28-Apr-2025