மேலும் செய்திகள்
போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது
04-Dec-2025
குன்னுார்: குன்னுாரில் கட னை பெற்று தலைமறைவாக இருந்தவருக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குன்னுார் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். பைனான்ஸ் நடத்தி வரும் இவர், கணேசன் என்பவருக்கு சில ஆண்டுக்கு முன்பு, ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார். அவர், கடனை திருப்பி செலுத்தாததால், கடந்த, 2024ல் ஜெய்கணேஷ் குன்னுார் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில் ஆஜராகாமல் இருந்த கணேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, குன்னுார் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில், எஸ்.எஸ்.ஐ., பண்ணாரி, காவலர் சிவசுப்ரமணி விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த, ஊட்டி தனியார் பார் ஒன்றில் பணியாற்றி வந்த, கணேஷனை பிடித்துநேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கீதா, குற்றவாளிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
04-Dec-2025