உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சி ஊழியர்களுக்கு குன்னுாரில் மருத்துவ முகாம்

நகராட்சி ஊழியர்களுக்கு குன்னுாரில் மருத்துவ முகாம்

குன்னுார், : குன்னுாரில் துாய்மை பணியாளர்கள் உட்பட நகராட்சி ஊழியர்களுக்கான பொது மருத்துவ முகாம் நடந்தது.குன்னுார் நகராட்சியில் உள்ள துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், இலவச மருத்துவ முகாம் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நகராட்சி தலைவர் சுசிலா முகாமை துவக்கி வைத்தார். ஐந்து பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர், 'எக்ஸ்ரே, இசிஜி, ரத்தப் பரிசோதனை, பொது மருத்துவம்' என, பல்வேறு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.முகாமில், நகராட்சி கமிஷனர் இளம்பரிதி, கவுன்சிலர்கள் ராமசாமி, சரவணகுமார், கோபி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர் சரவணன் உட்பட ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ