மேலும் செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து
5 hour(s) ago
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
5 hour(s) ago
குன்னுார்;குன்னுார் பகுதியில் சாம்பல் நில லங்கூர் குரங்குகள் காணப்படுவது, வனவிலங்கு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில், அரிய வகை வனவிலங்குகள் அதிகம் உள்ளன. அதில், நீலகிரி லங்கூர் குரங்கு வகைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நாட்டில், 10க்கும் மேற்பட்ட வகையிலான லங்கூர் குரங்குகள் உள்ள நிலையில், சாம்பல் நிற லங்கூர் குரங்குகள், கர்நாடக மாநிலம் பந்திப்பூர், முதுமலை உள்ளிட்ட நீலகிரி மலை அடிவார எல்லை சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.இந்நிலையில், குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில் சாம்பல் நிற லங்கூர் குரங்குகள் காணப்படுகிறது.'நெஸ்ட்' சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவன தலைவர் சிவதாஸ் கூறுகையில், ''லங்கூர் குரங்குகள்ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் வாழ்வதில்லை. மித வெப்பம் கொண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வாழ கூடியது. சண்டையிடக்கூடிய இந்த லங்கூர் குரங்குகள், சாதாரண குரங்குகளை விரட்டும். முன்பு ராணுவ பகுதிகளில் சாதாரண குரங்குகளை விரட்டுவதற்கு இந்த லங்கூர் குரங்குகள் அந்த பகுதிகளில் கொண்டு சென்று விடப்பட்டன.கர்நாடகா முதுமலை பகுதிகளில், 'ஹனுமன் குரங்குகள்' என, அழைக்கப்படும் சாம்பல் நிற நீண்ட வால் கொண்ட லங்கூர் குரங்குகள் முதல் முறையாக குன்னுார் மலை அடிவார பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ளது.அவை உணவு தேவைக்காக இடம்பெயர்ந்து இருக்கலாம். சமீபகலமாக நடுவட்டம் கூடலுார், பகுதிகளில் அதிகம் தென்படுகிறது. சுற்றுலா பயணிகள் இவற்றிற்கு உணவு கொடுப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
5 hour(s) ago
5 hour(s) ago