சேற்றில் சிக்கிய மினி பஸ்
பந்தலுார்; பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் சாலையோர சேற்றில் மினிபஸ் சிக்கியது. பாட்டவயல் பகுதியில் இருந்து கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி வழியாக சேரம்பாடி பகுதிக்கு தனி யா ர் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று மாலை மழவன் சேரம்பாடி பகுதியில் சென்றபோது, சாலை யோர சேற்றில் சிக்கியது. பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டனர். பின்னர் 'பொக்லைன்' இயந்திரம் வரவழைக்கப்பட்டு பஸ் அங்கிருந்து மீட்கப்பட்டது. பஸ் சேற்றில் சிக்கியதால்,சேரம்பாடி பகுதிக்கு நேற்று மினி பஸ் இயக்காத நிலையில், தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.