உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ. 27 கோடியில் குடிநீர் திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைத்தார்

ரூ. 27 கோடியில் குடிநீர் திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைத்தார்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி ஊட்டி--கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்து நகரில் அமைந்துள்ளது. மருத்துவக் கல்வி இயக்குனர் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்துக்கு நாள் ஒன்றுக்கு, 17 லட்சம் லிட்டர் நீர் வினியோகத்தை வழங்க குடிநீர் வடிகால் வாரியத்திடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, கலெக்டர் அறிவுறுத்தலின்படி, நிர்வாகப் பொறியாளர் பொதுப்பணித்துறை, மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பங்கேற்று குடிநீரின் தேவை நாள் ஒன்றுக்கு,7.9 லட்சம் லிட்டர் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது. குடிநீர் வழங்கும் பணிக்காக, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், முன்னிலையில் இந்த திட்டத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார், அரசு மருத்துவக்கல்லுாரி டீன் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ