உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குற்ற சம்பவங்களை தடுக்க நவீன கண்காணிப்பு கேமராக்கள்

குற்ற சம்பவங்களை தடுக்க நவீன கண்காணிப்பு கேமராக்கள்

ஊட்டி; ஊட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்க நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஊட்டிக்கு ஆண்டு தோறும், 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும், எட்டு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ஊட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊட்டி நகருக்கு வந்து செல்கின்றனர். இதனால், ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசாரால் முடிவு செய்யப்பட்டது. தற்போது, ஊட்டி படகு இல்ல சாலை உட்பட நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.போலீசார் கூறியதாவது, 'ஊட்டி நகரில் இதற்கு முன்பு பொருத்தப்பட்ட அதிநவீன கேமராக்களில், 100 மீட்டர் துாரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும். மேலும், தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும், 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள்ளலாம். தற்போது பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், குற்ற சம்பவங்களை தடுக்க முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை