மேலும் செய்திகள்
சேதமான நடைபாதை மக்கள் நடந்து செல்ல சிரமம்
5 minutes ago
ஊட்டி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுகொண்டனர். பொது நுாலகத்துறை சார்பில் சிறந்த வாசகர் வட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தகிரி கிளை நுாலகத்திற்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. கலெக்டரிடம் விருதை காண்பித்து கிளை நுாலக ஊழியர்கள் வாழ்த்து பெற்றனர். மேலும், 2023- 2024 ம் ஆண்டிற்கான மத்திய அரசின் புதுமையான அறிவியல் கண்டு பிடிப்பிற்கான தேசிய அளவிலான தேர்வு துாத்துக்குடி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில், ஊட்டி வட்டம் பாக்யா நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் வினுகிருஷ்ணன் பங்கேற்று, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பானை செய்யும் கருவியை கண்டுபிடித்து, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அதற்கான, 'இன்ஸ்பியர் ஹவார்டு' கல்வி அமைச்சரால் வழங்கப்பட்டது. அந்த மாணவன், பள்ளி ஆசிரியர்களை அழைத்து கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
5 minutes ago