உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூண்டில் சிக்கிய குரங்குகள்

கூண்டில் சிக்கிய குரங்குகள்

குன்னுார் : குன்னுார் காட்டேரி பூங்காவில், கடந்த பல நாட்களாக குரங்குகள், மலர் செடிகளை சேதம் செய்து வந்ததுடன், சுற்றுலா பயணிகளுக்கும் தொல்லை தந்து வந்தன. இது தொடர்பான புகாரின் பேரில், வனத்துறையினர் கூண்டு வைத்து, இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர். அதில், 63 குரங்குகள் கூண்டிற்குள் சிக்கின. வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர், குரங்குகளை கொண்டு சென்று பவானி அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் மேலும் பல குரங்குகள் பூக்கள்; செடிகளை சேதம் செய்து வருவதால், அவற்றையும் விரைவில் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை