உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகன ஓட்டுனர்கள் விதிகளை பின்பற்ற அறிவுரை

வாகன ஓட்டுனர்கள் விதிகளை பின்பற்ற அறிவுரை

பந்தலுார்; பந்தலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. பணியாளர் ஷாலினி வரவேற்றார். நீதிபதி சிவக் குமார் தலைமை வகித்து பேசியதாவது:நாட்டில் குற்றங்கள் குறைந்து, மக்கள் நிம்மதியாக வாழவே சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. இதனை வாகன ஓட்டுனர்கள் பின்பற்றினால் தினசரி நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பெயர்கள் பதிவு செய்வதன் மூலம், மத்திய, -மாநில அரசு திட்டங்கள் கிடைத்து பயனடைய வழி கிடைக்கும். பதிவு செய்யாதவர்கள் நீதிமன்றத்தை நாடினால் பதிவு செய்து செய்து தரப்படும். அதேபோல், வாகன ஓட்டுனர்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் முன்வர வேண்டும். சட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டு, தீர்வு கிடைக்க வேண்டுமானால் நீதிமன்றத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.வக்கீல் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''வாகன விதிமுறைகளை பின்பற்றாத ஓட்டுனர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாலைகளில் யாராவது நின்று 'லிப்ட்' கேட்டால் அவர்கள் வைத்துள்ள உடமைகளை ஆய்வு செய்தபின் வாகனத்தில் ஏற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் செய்யும் குற்ற செயல்களுக்கு ஓட்டுனர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்,'' என்றார். 'வாகன சட்டங்கள் மற்றும் டிரைவர்கள், பொதுமக்கள் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து,' தேவாலா இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் பேசினார். தொடர்ந்து, பந்தலுார் பஜாரில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள், போலீசார், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். சப்--இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை