உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் மீண்டும் இயக்கம்

இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் மீண்டும் இயக்கம்

குன்னுார்; புயல் மற்றும் கனமழை காரணமாக, இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட மலை ரயில் இயக்கம் நேற்று துவங்கியது.வங்க கடலில் ஏற்பட்ட 'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழகத்தில் கனமழை நீடித்தது. நீலகிரி மாவட்டத்தில், இரவில் கனமழை கொட்டி தீர்த்த போதும், பகலில் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காலநிலை நிலவுகிறது.இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு நாட்கள் ரத்து செய்யப்பட்ட நீலகிரி மலை ரயில்கள் அனைத்தும், நேற்று முதல் வழக்கம் போல இயங்க துவங்கின.மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு, ஊட்டிக்கு சென்றது. இதே போல காலை, 7:45 மணிக்கு குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு உள்ளூர் ரயில் புறப்பட்டு சென்றது. மலை ரயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kulandai kannan
டிச 05, 2024 20:15

It is time to wind up this train service once for all. யாரோ சிலரின் மகிழ்ச்சிக்காக, ஊழியர்கள் உயிரை பணயம் வைக்க வேண்டுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை