உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தைகள் நடமாட்டம் ; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

சிறுத்தைகள் நடமாட்டம் ; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

கோத்தகிரி;கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள 'பாப்டிஸ்ட்' காலனியில் ஒரே நேரத்தில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வந்துள்ளன.இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான நிலையில், காலனி மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு வீடுகளை விட்டு வெளியே வர பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் நடமாடும் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை கண்காணித்து, கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ