உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முக்கூர்த்தி தேசிய பூங்கா; பாதுகாப்பு குறித்து ஆய்வு

முக்கூர்த்தி தேசிய பூங்கா; பாதுகாப்பு குறித்து ஆய்வு

கூடலுார் : முக்கூர்த்தி தேசிய பூங்காவின் பாதுகாப்பு பணிகள் குறித்து, தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரி ஆய்வு செய்தார்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல் பட்டு வரும், தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின், தென் மாநில உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரிணி, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, முக்கூர்த்தி தேசிய பூங்காவில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.மேலும், 'நீலகிரி வனக்கோட்டத்தில் புலிகள் வாழ்விடமான, நடுவட்டம் துவங்கி முக்கூர்த்தி தேசிய பூங்கா, பார்சன்ஸ்வேலி பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள்; முக்கூர்த்தி தேசிய பூங்காவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வன உழியர் எண்ணிக்கை; பணியின் போது அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்; புலி கணக்கெடுப்பு பணிகள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து,' அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, நீலகிரி கோட்ட டி.எம்.ஓ., கவுதம், கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ்பிரபு, வனச்சரகர் யுவராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை