உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சி மார்க்கெட் கடை வாடகை பாக்கி ரூ.12 கோடி!விரைவாக வசூலிக்க நிர்வாகம் நடவடிக்கை

நகராட்சி மார்க்கெட் கடை வாடகை பாக்கி ரூ.12 கோடி!விரைவாக வசூலிக்க நிர்வாகம் நடவடிக்கை

குன்னுார்;குன்னுார் மார்க்கெட்டில், 12 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளதால், நகராட்சி கமிஷனர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வாடகையை செலுத்த வியாபாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.குனனுார் நகராட்சிக்கு உட்பட்ட, 896 கடைகளில், 724 கடைகள் மார்கெட் வளாகத்தில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடைகளை மறு அளவீடு செய்து, 100 சதவீத வாடகை உயர்த்தப்பட்டது. இதனை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

வாடகை உயர்வு

இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், ஏற்கனவே அறிவித்த அறிவிப்பில், 2016ம் ஆண்டு ஜூலை முதல் 2019 வரையில் மறுமதிப்பீடு செய்த மாத வாடகை நிலுவை தொகை; 2019 முதல் 2022 வரையில், 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் உயர்வு செய்த வாடகையை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், உயர்த்தப்பட்ட வாடகை மாதந்தோறும் தொடர்ந்து செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

புதிய கடை கட்ட திட்டம்

தற்போது, ஊட்டியில் மார்க்கெட் கடைகள் இடித்து, ரூ. 36 கோடி மதிப்பில் புதிக கடைகளை கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இங்குள்ள வியாபாரிகளுக்கு ரேஸ் கோர்ஸ் பகுதியில், 180 தற்காலிகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஊட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், 'ஊட்டி நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் முடிந்தவுடன், குன்னுார் மார்கெட் பகுதியையும் இடித்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.இந்த திட்டம் நிறைவேறினால், பழமையான குன்னுார் மார்க்கெட் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரியளவிலான மார்க்கெட்டாக மாற வாய்ப்புள்ளது. எனினும், அந்த திட்டம் வரும் வரை, நகராட்சியின் வருமானத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகளிடம் வாடகையை முழுமையாக வசூலிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் திடீர் ஆய்வு

இந்நிலையில், நேற்று முன்தினம் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, நிலுவை வாடகையை உடனடியாக செலுத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதில், அதிகபட்சமாக, 18 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள வியபாரிகள் சங்க அலுவலக கட்டடத்தின் நிலுவை தொகையையும் செலுத்த உத்தரவிட்டனர். நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில்,'' குன்னுார் மார்க்கெட் கடைகளின் நிலுவை தொகை, 6 கோடி உட்பட 12 கோடி ரூபாய் வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கு கடை வைத்துள்ளவர்கள் தொகையை சிறிது, சிறிதாக செலுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்