மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டில் நகை,பணம் திருடியவர் கைது
19 hour(s) ago
கலை திருவிழா போட்டி மாணவர்கள் அசத்தல்
04-Sep-2026
சிறப்பு பராமரிப்பு பணி
04-Sep-2026
சிறுவாணி ஆற்றில் முதியவர் சடலம் மீட்பு
04-Sep-2026
கூடலுார் : கூடலுார் புளியம்பாறை மட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.கூடலுார் புளியம்பாறை மட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா, 18ம் தேதி காலை 7:00 மணிக்கு விநாயகர்வழிபாடு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 3:00 மணிக்கு முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 4:30 மணி முதல் சிறப்பு பூஜைகளும், முதல் கால பூஜை, பூர்ணாஹுதி தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று முன்தினம் காலை, 8:30 மணி முதல் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மூன்றாம் கால யாகபூஜை, சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று காலை, 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, யாக பூஜைகள் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
19 hour(s) ago
04-Sep-2026
04-Sep-2026
04-Sep-2026