உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்:கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் மூன்று மாநிலங்கள் இடையே ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேல்கூடலுார் சில்வர் கிளவுட் அடுத்த சனீஸ்வரன் கோவில் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.,4) பெரிய மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ஊட்டியிலிருந்து, கூடலுார், கர்நாடக, கேரளா செல்லும் வாகனங்களும், கூடலுாரில் இருந்து, ஊட்டி செல்லும் வாகனர்களும் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். கூடலுார் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போராடி இரவு, 9:30 மணிக்கு மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து, போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். அதேபோன்று, தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா அருகே, இன்று (நவ.,5) அதிகாலை, 2:00 மணிக்கு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்தது. தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு சென்று, அதிகாலை, 3:00மணிக்கு மரத்தை வெட்டி அகற்றினர். முதுமலையில் இரவு நேர போக்குவரத்துக்கு ஏற்கனவே தடை உள்ளிதன் காரணமாக, இப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே, தொரப்பள்ளி சோதனை சாவடி இரவு, 9:00 மணிக்கு மூடப்பட்டதால், ஊட்டியிலிருந்து கர்நாடக செல்லும் சுற்றுலா பயணிகள், பயணத்தை தொடர முடியாமல், இரவு முழுவதும் அப்பகுதியில் கடும் சிரமப்பட்டு காத்திருந்து இன்று காலை, 6:00 மணிக்கு வனச்சோதனை சாவடி திறந்தப்பின் புறப்பட்டு கர்நாடகாவுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !