உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி நிறைவு 1,020 பேர் பங்கேற்பு

தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி நிறைவு 1,020 பேர் பங்கேற்பு

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான என்.சி.சி., மாணவியருக்காக மலையேற்ற பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 'தமிழகம், கேரளா கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, ஆந்திரா தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுவை, அந்தமான் நிக்கோபார் தீவு, லட்சத்தீவு,' என, பல இடங்களில் இருந்தும் மாணவியர் வருகை தந்தனர். இரு கட்டமாக நடத்தப்பட்ட மலையேற்ற பயிற்சியில், தலா, 510 பேர் என, 1,020 பேர் பங்கேற்றனர்.ஊட்டி அருகே முத்தொரை பாலாடாவில் உள்ள ஏகலைவா ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய மலையேற்ற பயிற்சியில், கேர்ன்ஹில் வரை நடை பயணம் மேற்கொண்டனர். குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம், ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, போர்ச் சின்னங்கள், பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ விபரங்களை அறிந்து கொண்டனர்.மலை ரயிலில் பயணம் செய்தனர். தேசிய ஒருமைப்பாடு, உடல் வலிமை, மனவலிமை, தேசிய நல்லிணக்கம், ராணுவத்தின் பெருமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பயிற்சியை என்.சி.சி., துணை இயக்குனர் (பொது) கமாண்டோர் ராகவ் துவக்கி வைத்தார்.நிறைவு விழா நேற்று முன்தினம் முத்தொரை பாலாடா ஏகலைவா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில், என் சி.சி., மாணவியரின் பரதநாட்டியம், பாரத மாதா தேசப்பற்று நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. என்.சி.சி., குரூப் கமாண்டர் கர்னல் ராமநாதன் தலைமை வகித்து சான்றிதழ்கள் வழங்கினார். முகாம் கமாண்டன்ட் லெப். கர்னல் தீபக், பரிசுகள் வழங்கினார். துணை கமாண்டன்ட் லெப். கர்னல் கார்த்திக் மோகன், ஒருங்கிணைப்பாளர் கர்னல் சந்தோஷ், பாதுகாப்பு அலுவலர் மேஜர் மன்ஜீத் கர் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை