மேலும் செய்திகள்
நுாலகர் தின விழா
13-Aug-2025
கோத்தகிரி: கோத்தகிரி கிளை நுாலகத்தில், நுாலகர் தந்தை சீர்காழி ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய நுாலகர் தின கருத்தரங்கு நடந்தது. கோத்தகிரி கிளை நுாலக நுாலகர் அமுதா தலைமை வகித்தார். மாவட்ட நுாலகர் கிளமெண்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ''நுாலகம் என்பது ஒரு கோவில், நுாலகர்கள் ஒவ்வொருவரும் பூஜாரிகள். நுாலகர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும். வாசகர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து நுாலக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,'' என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ. வாசகர் வட்ட தலைவர் கோபால், கவிஞர் ராஜூ, கோத்தகிரி ரேடியோ இயக்குனர் மாணிக்கம் மற்றும் முனைவர் லிங்கன் ஆகியோர், நுால்கள்; வாசிப்பின் அவசியம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில், கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிளை அலுவலகங்கள், வாசகர்கள் பலர் பங்கேற்றனர். வாசகர் வட்ட துணைத்தலைவர் மகாலட்சுமி வரவேற்றார். நுாலகர் கண்ணப்பன் நன்றி கூறினார்.
13-Aug-2025