உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பந்தலுார: பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், யு.எஸ்.எஸ்.எஸ்., தன்னார்வ அமைப்பு சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. திட்ட அலுவலர் சுப்ரபா வரவேற்றார். இயக்குனர் பாதிரியார் ஜான்ஜோசப்தனிஸ் தலைமை வகித்து, 'இயற்கையை அழிப்பதால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள்; வனம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பு,' குறித்து பேசினார். விழிப்புணர்வு ஊர்வலம் தேவாலா பஜாரில் துவங்கி, வனச்சரக அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில், வனச்சரகர் சஞ்சீவி, வனவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் சூரியகலா பிரபு முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்து, வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற வலியுறுத்தி வனத்துறையிடம் மனு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் விஜயசுந்தரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !