உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒரே இடத்தில் பணிமனைகள் வைக்க இடம் வேண்டும்; வாயில் கருப்பு துணி கட்டி வந்து மனு

ஒரே இடத்தில் பணிமனைகள் வைக்க இடம் வேண்டும்; வாயில் கருப்பு துணி கட்டி வந்து மனு

ஊட்டி; ஊட்டியில் ஒரே இடத்தில் பணிமனைகள் வைக்க இடம் ஒதுக்க கோரி, வாகனபழுது நீக்கும் சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டி வந்து மனு அளித்தனர்.ஒரே இடத்தில் பணிமனை ஒதுக்க கோரி, ஊட்டி வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் நீண்ட கால கோரிக்கைகளை யாரும் செயல்படுத்தாததால், நேற்று வாயில் கருப்பு துணி கட்டி வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.சங்க தலைவர் வினோத்குமார் கூறுகையில், 'ஊட்டியில், 200க்கு மேற்பட்ட வாகன பழுது பார்க்கும் இடங்கள் உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன பழுது பார்க்கும் நிலையங்கள் செயல்பட்டு வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் வாகன பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.வாகன பழுது பார்க்கும் நிலையங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை தவிர்க்கும் விதமாகவும், எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், ஒரே இடத்தில் வாகன பழுது பார்ப்பு நிலையங்களை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பயனடைவர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை