மேலும் செய்திகள்
வனப்பகுதியில் முதிர்ந்த மூங்கில்கள் அகற்றம்
10 minutes ago
தென் மாநில தேயிலை ஏலத்தில் 40.72 கோடி வருவாய்
11 minutes ago
கடும் குளிரால் மக்கள் தவிப்பு
11 minutes ago
ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மார்கெட்டில், 20 கோடி ரூபாயில், நடந்து வரும் கடைகளின் கட்டுமான பணிகளை எம்.பி., ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி மார்க்கெட்டில் புதியதாக கட்டப்படும் கட்டடத்தின் தரைதளத்தில், 126 கார்கள் மற்றும் 163 இருசக்கர வாகனம் நிறுத்தம் செய்யும் வகையிலும், மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த தினசரி மார்க்கெட் அங்காடி பணிகளுக்கான புதிய கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அதில், இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, 689 கடைகள் கட்டுவதற்காக பணிகள் நடந்து வருகின்றன. 'பகுதி ஒன்றில், 20 கோடி ரூபாய் மதிப்பில் 239 கடைகளும், பகுதி இரண்டில், 39.78 கோடி ரூபாய் மதிப்பில்,450 கடைகள்,' என, மொத்தம், 689 கடைகள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 59.78 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகளை, நீலகிரி எம்.பி., ராஜா ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுப்படுத்த நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஊட்டி நகராட்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.17 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அரசு கொறடா ராமசந்திரன், ஊட்டி நகராட்சி கமிஷனர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
10 minutes ago
11 minutes ago
11 minutes ago