உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுபான்மையினருக்கு ஆலோசனை கூட்டம்

சிறுபான்மையினருக்கு ஆலோசனை கூட்டம்

குன்னூர் : குன்னூர் நகர பா.ஜ., சார்பில் சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டம் மற்றும் இணைப்பு விழா வெலிங்டன் சுமங்கலி அரங்கில் நடந்தது. பா.ஜ., நகர தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர், கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலர் செல்வகுமார், மாநில இளைஞரணி துணை தலைவர் குருமூர்த்தி பங்கேற்றனர். சிறுபான்மையினருக்கு கட்சியில் வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து கோவை மாநகர மாவட்ட செயலர் ஸ்டீபன் ஜெயசீலன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜான்சன் பேசினர். குன்னூர் 'ஏசுவின் கரம்' அமைப்பை சேர்ந்த எஸ்தர் ராணி, வசந்தி எஸ்தர், எபினேசர் மணி, அனந்தகுமார் உட்பட 250 பேர் பா.ஜ.க,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சியின் தேசிய பொறுப்பாளர்கள் பேகம், லலிதா குமாரமங்கலம் அடையாள அட்டை வழங்கினர். சந்திரபாபு, மணி, மோகன், குட்டன், விசு, பிரதிப், டேவிட்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். போதகர் இருதயராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை