மேலும் செய்திகள்
சோலுார் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா 20ல் துவக்கம்
19 minutes ago
இயற்கை உரம் பயன்பாடு விவசாயிகள் ஆர்வம்
22 minutes ago
குன்னூர் : கோத்தகிரியில், இரு கை, கால்களை இழந்த இசைக் கலைஞர் கிருஷ்ணமூர்த்தியின் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.நீலகிரி கலாசார சங்கம், கோத்தகிரி எச்.ஆர். எம்., டிரஸ்ட் இணைந்து 'இசை ஊக்கம்' என்ற இசை நிகழ்ச்சியை கோத்தகிரியில் நடத்தின. இரு கைகள், இரு கால்களை இழந்த கலைமாமணி விருது பெற்ற 65 வயது இசைக் கலைஞர் கிருஷ்ணமூர்த்தி, இரண்டு மணி நேரம் தனது வசீகர குரலில் இசை ரசிகர்களை கட்டிப் போட்டார்.நீலகிரி கலாசார சங்க தலைவர் சுந்தர் பேசுகையில், ''கிருஷ்ணமூர்த்தி, தனக்கு இரு கை, கால்கள் இல்லை என்பதை உணர்ந்தவுடன் தனது சகோதரி மூலம் இசை கற்க துவங்கி, 17 வயதில் முதல் சங்கீத நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.
இந்தியா, வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் அவர், பல கல்லூரிகளில் தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்,'' என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எச்.ஆர்.எம்., அறக்கட்டளை தலைவர் போஜராஜன் பேசுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கிருஷ்ணமூர்த்தியை நம்பிக்கைக்கு உதாரணமாக பல இடங்களில் மேற்கோள் காட்டி வருகிறார்,'' என்றார்.பாலமுரளி கிருஷ்ணா, முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர் பாகவதர் உட்பட பலரின் பாடல்களை பாடி பரசவப்படுத்திய கிருஷ்ணமூர்த்தியின் குரலுக்கு மெருகேற்ற, கோவை பாலசுப்ரமணியம் வயலின், உமையாள்புரம் மாலி மிருதங்கம், சென்சை கோவிந்தராஜன் தாளம் வாசித்தனர். நீலகிரி கலாசார சங்க அமைப்பாளர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.
19 minutes ago
22 minutes ago