உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேக்கங்களில் கூடுதல் தண்ணீர்

தேக்கங்களில் கூடுதல் தண்ணீர்

ஊட்டி:ஊட்டிக்கு குடிநீர் வினியோகிக்கும் முக்கிய நீர் தேக்கங்களில் கடந்தாண்டை விட தண்ணீர் இருப்பு கூடுதலாக உள்ளது.ஊட்டி நகரம் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நீர் தேக்கத்தில் 49 அடி நீர் இருப்பு உள்ளது. இதேபோல்,மேல் தொட்டபெட்டாவில் 22 அடியும், கீழ் தொட்டபெட்டாவில் 13 அடியும், கீழ் கோடப்பமந்தில் 4.5 அடியும், ஓல்டு ஊட்டியில் 6 அடியும், கிளன்ராகில் 7 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அளவு கடந்தாண்டை விட அதிகமாகும். அதே வேளையில், மார்லிமந்தில் 13 அடியும், டைகர்ஹில் நீர்தேக்கத்தில் 12.5 அடியும் நீர் உள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டைவிட குறைவாகும். கோரிசோலை நீர் தேக்கம் நீரின்றி வறண்டுள்ளது. 'முக்கிய நீர் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளதால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் வராது,' என பொறியாளர் ராமமூர்த்தி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை