உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 47 நாய்களுக்கு கருத்தடை

47 நாய்களுக்கு கருத்தடை

கூடலூர்:கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த 47 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.கூடலூர் நகராட்சி மற்றும் மசினகுடியிலுள்ள இந்திய இயற்கை மற்றும் வன விலங்கு பாதுகாப்பு மையத்தின் (ஐபான்) சார்பில், கூடலூர் நகராட்சியில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி கடந்த மூன்று நாட்களாக நடந்தது. 'ஐபான்' அமைப்பின் இயக்குனர் நைஜில் தலைமையிலான குழுவினர் கூடலூர் நகராட்சி பகுதிகளில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்து, மசினகுடியிலுள்ள தங்கள் மையத்துக்கு பிடித்து சென்று கருத்தடை அறுவை சிகிச்­சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் நாய்கள் பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே விடப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் 47 நாய்களுக்கு கருத்தடை அறு­வை சிகிச்சை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை