உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடை; மாவட்ட நிர்வாகம் வைத்த எச்சரிக்கை பலகை

உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடை; மாவட்ட நிர்வாகம் வைத்த எச்சரிக்கை பலகை

கோத்தகிரி; 'கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல கூடாது,' என, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.கோத்தகிரி - கூக்கல்தொறை சாலையில், உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மிகவும் ரம்மியமாக அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், கோத்தகிரி கோடநாடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா மற்றும் சல்லிவன் நினைவு பூங்காவை அடுத்து, உயிலட்டி நீர்வீழ்ச்சியை கண்டு களிக்க தவறுவதில்லை.சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடிக்காத இந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சென்று குளித்து வருகின்றனர். ஆபத்தான பாசிபடர்ந்த பாறையில் வழுக்கி விழுந்து, கடந்த காலங்களில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.'இங்கு உரிய பாதுகாப்பு பணியை செய்ய வேண்டும்,' என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், 'நீர்வீழ்ச்சி அருகில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லவோ; குளிக்கவோ கூடாது; மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ